உடல்நலக்குறைவால் சீமான் திடீரென மருத்துவமனையில் அனுமதி : தொண்டர்கள் அதிர்ச்சி..!
28 September 2020, 6:58 pmQuick Share
சென்னை : உடல்நலக்குறைவால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவி வரும் சூழலில் முக்கிய பிரமுகர்களுக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மறைந்த மக்கள் பிரதிநிதிகள் ஜெ.அன்பழகன், வசந்தகுமார் மற்றும் பாடகர் எஸ்.பி.பி ஆகியோரின் மறைவு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 53-வயதான அவர், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.