புதுச்சேரி TO தமிழகத்திற்கு பெட்டி பெட்டியாக மது கடத்தல்: 4 பெண்கள் கைது…446 பாட்டில்கள் பறிமுதல்..!!

Author: Rajesh
19 May 2022, 1:39 pm
Quick Share

புதுச்சேரி: தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 4 பெண்களை போலீசார் கைது செய்து 446 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உருளையன்பேட்டை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்து இருந்த பைகளை சோதனையிட்டதில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திண்டிவனம் கிடங்கல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வள்ளி (வயது 40), விஜயா (50), செல்வி (50), கல்பனா (34) என்பதும் தெரியவந்தது.

மேலும், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, கடத்திச் சென்று தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 446 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையில் ஒப்படைத்தனர்

Views: - 913

0

0