தாறுமாறாக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள்: பறிமுதல் செய்து அதிரடி காட்டிய அதிகாரிகள்..!!

Author: Aarthi Sivakumar
3 November 2021, 11:24 am
Quick Share

சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சில தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதே போல, தாம்பரத்திலும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கொட்டும் மழையிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Views: - 499

0

0