ரூ. 3 கோடி மதிப்பிலான டெண்டரை எடுப்பதில் திமுகவினரிடையே அடிதடி சண்டை : உடைந்தது திமுக பிரமுகரின் மண்டை..!

Author: kavin kumar
10 August 2021, 10:52 pm
Quick Share

சிவகங்கை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்காக நடைபெற்ற ஏலத்தில் திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.

சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகேவுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் நடைபெற்றது.இதில் திமுக சிவகங்கை மாவட்ட துணைச் செயலார் சேங்கை மாறன் தரப்பினர் உட்பட பல திமுக ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அப்போது, திடீரென திமுக மாவட்ட துனை செயலாளர் சேங்கைமாறன் அனியினருக்கும், திமுகவை சேர்ந்த கோவானூர் சோமன் என்பவரது அணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த சேரை கொண்டு தாக்கிக் கொண்டதில் சோமன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோமனின் ஆதரவாளர்கள் எதிர் தரப்புடைய காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன் காயமடைந்த சோமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 234

0

0