சென்னை TO திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து: மேலும் 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

Author: Rajesh
14 May 2022, 12:08 pm
1southern railway - updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படக்கூடிய இரண்டு ரயில்கள் 17 , 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக சென்னையிலிருந்து கோவை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் குறிப்பிட்ட 6 ரயில்கள் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படக்கூடிய இரண்டு ரயில்கள் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால் பயணிகள் முன்கூட்டியே பயணங்களை திட்டமிட கோரியும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Views: - 701

0

0