தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு அரசுப் பேருந்துகள் : இன்று முன்பதிவு ஆரம்பம்!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2021, 9:31 am
சென்னை : தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோருக்கான அரசு பேருந்துகளின் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.
தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை, நாடு முழுதும் நவம்பர், 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளியன்று, ஒரு நாள் கூடுதலாக விடுப்பு எடுத்தால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர், தங்கள் பயணத்திற்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில், ஒரு மாதத்திற்கு முன், முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, நவம்பர் 3ல் பயணிப்பதற்கான முன்பதிவு, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு இன்று துவங்குகிறது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பல்வேறு நகரங்களுக்கு சொகுசு பேருந்துகளும், படுக்கை வசதி உடைய பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
0
0