செல்போனில் FIREWALL கேம் விளையாடிய மாணவன் திடீர் மரணம் : புதுச்சேரியில் அதிர்ச்சி!!

2 February 2021, 1:31 pm
Firewall Game - Updatenews360
Quick Share

புதுச்சேரி : மொபைல் போனில் பயர்வால் எனும் ஆன்லைன் கேமை தொடர்ந்து நான்கு மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்த, பள்ளி மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி  வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்ஷன் (வயது 16). தனியார் பள்ளி மாணவரான, இவர் வீட்டின் அறையில் அமர்ந்து கொண்டு தனது மொபைல் போனில் பயர்வால் எனும் ஆன்லைன் கேமை தொடர்ந்து நான்கு மணி நேரமாக விளையாடி கொண்டிருந்தார்.

காதில் ஹெட் செட் வைத்துக் கொண்டு அதிகமாக சத்தத்துடன் விளையாடியதால், அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி விட்டனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெட்போன் போட்டுக் கொண்டு கேம் விளையாடிய மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0