நீட் பயிற்சி மையத்தில் சடலமாக கிடந்த மாணவி : இறந்து 2 மணி நேரத்துக்கு பின்னரே தகவல்? நீதி வேண்டி பெற்றோர் கண்ணீர் மனு.!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 5:46 pm
Cbe Suicide Parents Petition - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் நீட் பயிற்சி மைய்யத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் நீட் பயிற்சி மையத்தில் ஸ்வேதா என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது தந்தை பெருமாள் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

தொடர்ந்து தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது : நாங்கள் கோவையில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வந்தாலும், எங்களது மகள் ஸ்வேதா மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைபட்டதன் காரணமாக, நாங்கள் அவளை கோவில்பாளையம் பகுதியில் உள்ள வாரி மெடிக்கல், அகாடமியில், கடந்த 5 மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து படிக்க வைத்து வந்தோம்.

எங்கள் மகள் மன வலிமை மிக்கவர், துணிச்சலானவர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8. 15, மணியளவில் எங்களது மகள், பயிலும் வாரி, அகாடமியில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு எனது மகள் ஸ்வேதா, உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து விட்டார் என்றும், ஸ்வேதாவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம், என்றும் உடனடியாக நீங்கள் மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தார்கள்.

இதனை தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்த பொழுது எங்கள் மகளை ஆம்புலன்சில் படுக்க வைத்திருந்தார்கள். அருகில் சென்று பார்த்தபோது எனது மகள் இறந்த நிலையில் இருந்தார். இது சம்பந்தமாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் மகள், யோகேஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட காதல் பிரச்சனை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் எங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கருதுகிறேன். அதற்கான காரணங்கள் எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையால் கொல்லப்படுவதற்கு எந்த புகைப்பட ஆதாரம் இல்லை, எனது மகள் மரணத்தை உடனடியாக என்னிடம் தெரிவிக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக சொன்ன காரணம் என்ன? எங்க மகள் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும். என்று கண்ணீர் மல்க கூறினர்.

Views: - 608

0

0