சாலையில் சென்ற காரில் திடீர் தீ : காரில் இருந்தவர்கள் சுதாரித்ததால் உயிர்சேதம் தவிர்ப்பு!!

18 June 2021, 1:13 pm
Car Fire - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சையத். இவர் காரமடை பகுதியில் கிரில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் நேற்றைய தினம் வீட்டில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது சாண்ட்ரோ காரை நேற்று பெட்ரோல் அடிப்பதற்காக தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

கரில் வந்து கொண்டிருந்த போது பெள்ளாதி அருகே வி.வி.கார்டன் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து கருகும் வாடை வந்துள்ளது. இந்நிலையில் சையத் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார்.

காரிலிருந்து கரும்புகையுடன் இன்ஜினில் இருந்து தீ பற்றி உள்ளது. பின்னர் மளமளவென காரின் முன்பகுதி தீ பற்றி எரியத் துவங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலிருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனுப்பியதற்கு முன்னரே கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 163

0

0