கீழடி- அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு: கேக் வெட்டி கொண்டாட்டம்..!

14 February 2020, 12:52 pm
Quick Share

சென்னை: கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீட்டை வரவேற்கும் விதமாக கீலாடியில் கேக் வெட்டி தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடினர்.

தமிழக பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கினார். இதில், கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்க அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கீழடியில் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை வரவேற்கும் விதமாக கீலாடியில் கேக் வெட்டி தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடினர்.