10 லட்சத்தை தாண்டியது தமிழக கொரோனா மொத்த பாதிப்பு : இன்று ஒரே நாளில் 10,941 பேருக்கு தொற்று உறுதி..!!!

19 April 2021, 6:52 pm
Corona_test_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ நெருங்கியுள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 10,941 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,02,392 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 3,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 685 பேருக்கும், கோவையில் 534 பேருக்கும், திருவள்ளூரில் 473 பேருக்கும், திருச்சியில் 241 பேருக்கும், திருப்பூரில் 233 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,157 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 6,172 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 75,116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 117

1

0