முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட தஞ்சை கோவில் : பக்தர்கள் ஏமாற்றம்!!

16 April 2021, 1:13 pm
Thanjai Temple Closed -Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : கொரனோ தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கொரனோ பரவல் காரணமாக இன்று அதிகாலை முதல் மூடப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலின் பிரதான நுழைவாயிலான மராட்டா நுழைவாயில் முன்பு இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் எவருக்கும் உள்ளே அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் கோவில் உள்ளே இருக்கும் சுவாமிகளுக்கு மட்டும் நாள்தோறும் நடக்கும் பூஜைகளும் அபிஷேகங்களும் கோவில் ஊழியர்களை வைத்து நடைபெற்று வருகிறது .

இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூறுகையில் பக்தர்கள் அனைவரும் அறியும் வகையில் அறிவிப்பு கொடுத்து பின்பு தஞ்சை பெரிய கோயிலை மத்திய தொல்லியல் துறை பூட்டி இருக்கலாம் எனவும் தற்போது நாங்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாக சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் தெரிவித்தனர்.

Views: - 28

0

0