ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில்… விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் ; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 9:46 am
Quick Share

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் என்றும், அரசியலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொழில் திறன் மேம்பாட்டில் உளவியல் பயன்பாடு’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் புதுச்சேரி பல்கலைக்கழக பண்பாட்டு மைய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கிராமிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் தொழில் திறன் மேம்பாடு குறித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு செல்லும்போது விமர்சனம் செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர் எத்தனை தடவை வெளிநாட்டுக்கு போய் வருவது என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் நடந்து வரும் சில சம்பவங்களால் ஆளும் கட்சியினர் அச்சத்தில் இருந்து வருவதாக குறிப்பிட்ட அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன் என்றும், இன்னும் அதிக அளவில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன், முடிவு செய்துவிட்டு கூறுகிறேன் என்று பதில் அளித்தார். திமுக வெற்றி பெற்றால் வாக்கு மிஷின் சரியாக வேலை செய்கிறது.

தோல்வியடைந்தால் வாக்கு மிஷின் வேலை செய்யாதா..? அப்படி என்றால் திமுகவினர் வெற்றி பெற்றது உண்மை இல்லையா..? என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை, அனைத்து தலைவர்களும் வருகிறார்கள். ஜனநாயகம் பெருகி வருகிறது என்பதைத்தான் பிரதமர் மோடி தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார், என்று தமிழிசை தெரிவித்தார்.

Views: - 495

0

0