திடீரென அறுந்து விழுந்த கயிறு… கீழே விழுந்த மேயர், துணை மேயர் ; தஞ்சை மாநகராட்சி அலுவலக பொங்கல் கொண்டாட்டத்தில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan12 January 2024, 4:31 pm
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கயிறு இழுத்தல் போட்டியில் கயிறு அறுந்து விழுந்ததில் மேயர், துணை மேயர் உள்பட அனைவரும் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாநகராட்சியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மியூசிக்கல் சேர், லெமன் இன் தி ஸ்பூன், உறியடிப்போட்டி, சாக்கு போட்டி, கயிறு இழுத்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள், பெண்கள் என சரிசமம் என்று நிரூபிக்கும் வகையில், ஒருபுறம் மேயர் சன்.ராமநாதன் மற்றும் ஆண் மாமன்ற உறுப்பினர்களும், மற்றொருபுறம் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் உமா மகேஸ்வரி மற்றும் பெண் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இருதரப்பினரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டு கயிறை இழுத்தனர். அப்போது, எதிர்பார்க்காத விதமாக, சட்டென்று கயிறு அறுந்தது. இதில் மேயர், துணை மேயர், ஆணையர் உட்பட அனைவரும் கீழே விழுந்தனர்.
இது அங்கு கூடி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆண்களுக்கு பெண்கள் நிகர் என இந்த போட்டியின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
0
0