தஞ்சையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்… வாட்ஸ் ஸ்டேட்டஸ்-ஆல் தப்பிய வாத்தியார்..!!
Author: Babu Lakshmanan8 பிப்ரவரி 2022, 12:58 மணி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு விட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த பருத்தியப்பர் கோவிலைச் சேர்ந்த மாணவி கடந்த சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணித ஆசிரியர் சசிகுமார் வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் தரக்குறைவாக திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் சித்தப்பா அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் சசிகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கணித ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுது அவரை செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதை டிக் டாக்கில் அவரை, ‘ஓசி சோறு திண்ணும் சோத்தப்பன்,’ என்கிற பாணியில் இழிவாகவும், கேவலமாகவும் 19 வினாடிகள் டிக் டாக் செய்து அதை தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார்.
இதனைப் பார்த்த பள்ளி நிர்வாகம் மற்றும் கணித ஆசிரியர் மாணவியை அழைத்து வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியது தொடர்பாகவும், டிக் டாக் செய்து இருப்பது குறித்தும் ஆசிரியர் கண்டித்திருப்பதாகவும் ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
0
0