ஆ.ராசாவின் காரை மறித்து வாக்கு சேகரித்த அதிமுகவினர்… உடனே நடந்த பரபரப்பு சம்பவம் : வைரலாகும் Video!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 6:42 pm
A Raja
Quick Share

ஆ.ராசாவின் காரை மறித்து வாக்கு சேகரித்த அதிமுகவினர்… உடனே நடந்த பரபரப்பு சம்பவம் : வைரலாகும் Video!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் உள்ள கொத்துவா பள்ளி வாசலில் இன்று ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா காரில் வந்தார். அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் போடுங்க அம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து என கோஷம் இட்டனர்.

இதனை கண்ட ஆ.ராசா வாகனத்தை நிறுத்தி அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதிமுக நிர்வாகிகள் அவருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க அவரிடம் வாக்கு கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.

அதனை வாங்கி கொன்டு கை கொடுத்து விட்டு அங்கு இருந்து கிளம்பினார் இதனிடையே ராசா பேசி கொண்டு இருந்த போது திமுக தொண்டர் ஒருவர் அதிமுகவினர் கோஷம் எழுப்பிய போது எதிர் கோஷம் எழுப்பினார் இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 150

0

0