திருமணம் முடித்த கையோடு நடிகர் விவேக்கின் ஆசையை நிறைவேற்றிய மணமக்கள்

21 June 2021, 8:31 pm
Quick Share

மதுரை: மதுரையில் திருமணம் முடித்த கையோடு மணமக்கள் மதுரை பாண்டி கோவில் அருகே நான்கு வழி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரி தம்பதியின் மகள் சக்திக்கும் – வரிச்சூரை சேர்ந்த செல்வம் மகன் நலந்த்குமாருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று தல்லாகுளம் பெருமாள் கோவில் முன்பு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு மணமக்கள் மதுரை பாண்டி கோவில் அருகே நான்கு வழி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

கொய்யா மரம், வேப்பமரம், புளியமரம் நெல்லிமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்த தம்பதியினர் நம்மிடம் கூறும் போது நடிகர் விவேக் பல லட்ச மரங்களை நட்டுவைத்தார். மக்களும்.மரக்கன்று நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் கூறியதை நினைவு கூர்ந்து வாழ்க்கையில் பயணம் ஆரம்பிக்கும் நாங்கள் முதல் வேளையாக மரக்கன்றுகளை நட்டு வைத்து வாழ்க்கை துவங்குகிறோம் என்றனர்.

Views: - 134

0

0