ஜனவரி மாத மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்: தமிழகத்தில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு..!!

4 February 2021, 10:39 am
rain damges - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்திய குழுவினர் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் அருகே சீத்தப்பட்டியில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ரணஞ்சே சிங், ஷுபம் கார்க், பால்பாண்டியன் ஆகியோரை கொண்ட மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது. மத்திய குழு 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து மதிப்பிடுகிறது.

தமிழகம் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட மத்திய குழுவினர் இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

Views: - 0

0

0