ஆடு மேய்ப்பதில் தகராறு : பட்டியலினத்தை சேர்ந்தவரை காலில் மண்டியிட்டு விழ வைத்த கொடுமை!!

Author: Udayachandran
13 October 2020, 1:25 pm
Cruelty- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறால் பட்டியலினத்தை சேர்ந்தவரை 7 பேர் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், ஓலைக்குளம் வடக்கு தெருவை சார்ந்தவர் ஆவுடை சங்கு மகன் பால்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்த இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதே கிராமத்தை சேர்நத் சிவங்கு என்பவரும் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 8ஆம் தேதி பால்ராஜ் ஆடு மேய்த்துக்கொண்டிரக்கும் போது அவருடைய ஆடு, சிவசங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சிவசங்கு பால்ராஜை கடுமையாக தாக்கி அவரது சாதி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தின்ர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் சிவசங்கு தனது உறவினர்களை அழைத்து, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பால்ராஜிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பால்ராஜை காலில் விழ வைத்துள்ளனர். இதைப் பார்த்த பால்ராஜ் மகன் கருப்பசாமி தடுக்க சென்ற போது, அவரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொன்று விடுவோம் என மிரட்டியும் உள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது, இதையடுத்து கயத்தாறு காவல்துறையினர் சிவசங்கு, சங்கிலி பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆடு மேய்ச்சால் ஏற்பட்ட தகராறால் பட்டியலினத் சேர்ந்தவரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 54

0

0