காதலிப்பதாக கூறி சிறுமிகளை குறி வைக்கும் காதல் மன்னன் : இரண்டு சிறுமிகளுக்கு தாலி கட்டிய இளைஞர் கைது!!

Author: Udhayakumar Raman
26 September 2021, 8:33 pm
Quick Share

அரியலூர்: இராயம்புரம் அருகே சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் இராயம்புரம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் டாடா ஏசி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் செந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது அவரை காதலிப்பதாக கூறி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தரப்பட்ட புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் அஜீத்குமார் அங்கு வேறு ஒரு சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்துள்ளார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செந்துறை அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அச்சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்து குறிப்பிடத்தக்கது.

Views: - 274

0

0