பட்டா நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய குடும்பம் : நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன் விஷம் குடித்ததால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 4:23 pm
Land Issue -Udpatenews360
Quick Share

பட்டா நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய குடும்பம் : நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன் விஷம் குடித்ததால் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சானமாவு என்னும் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 2.30 ஏக்கர்கள் நிலத்தில் 41 பட்டியலின சமூக மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இடம் அளந்து பயணாளர்களுக்கு வழங்கப்படாத நிலையில்
ஆதே ஊரில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்து தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டுள்ளனர்..

ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க நீதிமன்ற உத்தரவின் படி கடந்த மாதம் வீடு கட்டும் விழாவினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மேற்க்கொண்டபோது இரண்டு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்ப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி இடம் அளந்துக்கொடுக்க ஒரு மாதம் கால அவகாசம் கோரியிருந்த அதிகாரிகள் இன்று, பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளக்க ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் தாசில்தார் உள்ளிட்டோர் வந்தபோது, பல ஆண்டுகளாக நிலத்தை பயன்படுத்தி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மாதேவம்மா(38), முருகேசன்(30), மஞ்சு(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் முன்னிலையில் விவசாயத்திறக்கு பயன்படுத்த கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தனர் .

உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் தற்கொலைக்கு முயன்றவர்களை மீட்டு, ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மஞ்சு என்பவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் சானமாவு கிராமத்தில் முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நில அளவை செய்யும் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளது.

Views: - 272

0

0