பறந்து வந்த ஹெலிகாப்டர்.. இறங்கி வந்த அண்ணாமலை : தேனி தேர்தல் பிரச்சாரத்தில் மாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 1:25 pm
HElicopter
Quick Share

பறந்து வந்த ஹெலிகாப்டர்.. இறங்கி வந்த அண்ணாமலை : தேனி தேர்தல் பிரச்சாரத்தில் மாஸ்!!

இந்திய ஜனநாயக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரச்சாரம் செய்தார்

தேனி பங்களாமேடு பகுதியில் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏராளமான கூட்டணி கட்சி தொண்டர்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்தார்.

இதற்காக இன்று மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அண்ணாமலை தேனி அருகே வடபுதுபட்டி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் தரை இறங்கி அங்கிருந்து டிடிவி தினகரனுடன் ஒன்றாக பிரச்சார வாகனத்தில் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் பிரச்சாரம் முடிந்த பிறகு தேனியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி சென்று அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவின் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

Views: - 135

0

0