தங்கையை மடியில் வைத்து கொஞ்சி குலாவிய அண்ணன் : கொலை செய்யப்பட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan25 ஜனவரி 2022, 5:26 மணி
கன்னியாகுமரி : கடியப்பட்டணத்தில் 1 1/2 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன் தன் தங்கையை மடியில் வைத்து புன் சிரிப்போடு கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போர் கண்களை குளமாக்கி வருகிறது
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி கடந்த 21-ம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த நிலையில் அந்த சிறுவனை ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்த நிலையில் பாத்திமா மற்றும் அவரது கணவர் சரோபியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவனின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், தற்போது அந்த நான்கு வயது சிறுவன் ஜோகன் ரிஷி தனது தங்கையான கைக்குழந்தையை மடியில் வைத்து பிஞ்சு புன் சிரிப்புடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கி வருகிறது.
0
0