புதுக்கோட்டையை தொடர்ந்து பெரம்பலூரில் அதிர்ச்சி: வீட்டின் கூரையின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

Author: Rajesh
25 January 2022, 5:08 pm
Quick Share

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி மலைப்பகுதியில், காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. நேற்று காலை, இங்குள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி நடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், மருதஈச்சாங்காடு பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியின் வீட்டுக் கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. அவரது வீட்டுக் கூரை ஆஸ்பெடாஸ் சீட்டால் போடப்பட்டிருந்தது. அதைதுளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

ஏற்கெனவே இதுபோல் ஒருமுறை துப்பாக்கி குண்டு வீட்டில் பாய்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். முன்னதாக கடந்த மாத இறுதியில் புதுக்கோட்டையில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து இதேபோல வெளியேறிய குண்டு ஒன்று, சிறுவனொருவனின் தலையில் பலமாக தாக்கியிருந்தது.

தற்போது மீண்டுமொருமுறை பெரம்பலூரில் இதேபோல நிகழ்வு ஏற்பட்டுள்ளது. வீட்டுக் கூரைக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டிருந்தாலும், இரண்டாவது முறையாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

Views: - 379

0

0