திமுக தேர்தல் அறிக்கை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி.. திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா கொடுத்த ரியாக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2024, 10:08 pm
stalin
Quick Share

திமுக தேர்தல் அறிக்கை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி.. திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா கொடுத்த ரியாக்ஷன்!!

திண்டுக்கல் தொகுதியில் பாஜக கூட்டணியின் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமா அவர்களின் அறிமுகக் கூட்டம் திண்டுக்கல்லில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

அறிமுக கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் திலகபாமா கூறுகையில், பாமக திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கிறது. திராவிட கட்சிகளின் அராஜகப் போக்கில் இருந்து நாம் விடுபட வேண்டியது மிகவும் முக்கியம். இந்தியாவை உலக அரங்கில் ஆளுமையுடன் நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்ற பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆகி மீண்டும் இந்தியாவை சரியான வழியில் வழி நடத்திட வேண்டும் என்ற அவா எல்லோருக்கும் உள்ளது.

திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்தவரை இங்கு பழம் தின்று கொட்டை போட்டவர்கள் உக்காந்து உக்காந்து இந்த தொகுதி மிகவும் தேக்க நிலையில் உள்ளது. அது மாற்றம் அடைய வேண்டும். திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைகள் தொடங்கி சுங்கடி சேலைகள், பூக்கள், பணப்பயிரான காபி, நெல் விவசாயம், இன்று பழனியில் வெடிகுண்டு அச்சுறுத்தல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் குலைந்து உள்ளது.
தலைமுறையை அளிக்கக்கூடிய போதைப்பொருள் தமிழகத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதையெல்லாம் நாம் மீட்டெடுக்க வேண்டும்.

இங்கு வேட்பாளர் திலகபாமா போட்டியிடவில்லை. பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் போட்டியிடுவதாக நினைத்து நாம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், இன்று நான் அடுத்தவரை குறை சொல்லி கொண்டு இருக்கும் தேவை எனக்கு இல்லை. நாங்கள் நினைப்பது எல்லாம் அடுத்த தலைமுறைக்கு என்ன தேவை என்று நினைத்து பணியாற்றி கொண்டு இருக்கிறோம். கூட்டணி தர்மத்தோடு நாங்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். குற்றசாட்டு வைத்தால் நாங்களும் நீளமாக வைக்கலாம். ஆனால் அது எங்களுக்கு தேவையல்ல. நான் ஒன்றும் வேடந்தாங்கல் பறவை அல்ல இந்த மண்ணில் பிறந்த பறவை குஞ்சு.

தேச நலன் கருதி தமிழகத்தின் நலன் கருதி இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. போதைப்பொருள் கடத்துபவர் முதலமைச்சருடன் கூட உள்ளார். முதலமைச்சருடன் யார் வேண்டுமானாலும் போட்டோ எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. உளவுத்துறை எந்த நிலையில் செயல்படுகிறது என்று தெரியவில்லை. இந்த நிலைமையில் ஆட்சி செய்து எங்களை பார்த்து கேள்வி கேட்க வேண்டாம்.

உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் இதுவரை எந்த பிரதமரும் செய்யாத விஷயங்களை பிரதமர் மோடி அவர்கள் செய்துள்ளார். பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன அதிமுக நாளைக்கு யாருக்கு வாக்களிக்க போகிறார்கள். இந்தியா கூட்டணிக்கா? அப்போ அவர்கள் திமுகவின் B டிமா? என கேள்வி எழுப்பினார். கேள்விகளை குதர்க்கமாக கேட்க வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். பாஜக தலைமையான கூட்டணி கட்சிகள் ஆக்கபூர்வமான செயல்களில் மட்டுமே ஈடுபட உள்ளோம்.

போன தேர்தலின் போது இந்த தொகுதியில் ஒரு அரசு கல்லூரி இல்லை என்று நாங்கள் கூறி வந்தோம். அதனால் இப்போது இந்த தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி கொண்டு வந்துள்ளார்கள். 20 வருடமாக இந்த தொகுதியில் இருப்பவர்கள் அதை செய்யவில்லை. நாங்கள் தேர்தலுக்கு மட்டும் வாக்கு கேட்டு வருபவர்கள் இல்லை. போன தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்கின்படி பழங்குடி இன மக்களுக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான 5 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். இன்றும் நிறைய மாணவர்களுக்கு கல்வி தொகை கொடுத்து உதவி செய்து வருகிறேன். ஆகையால் நான் தேர்தலுக்கு மட்டும் இங்கு வரவில்லை. தேர்தலின் களமே முற்றிலும் மாறப்போகிறது அதற்கான அடித்தளம் தான் இது.

திமுக ஜெயித்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி கேட்ட கேள்விக்கு பாமக வேட்பாளர் திலகபாமா குபீரேன சிரித்தார். வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என தெளிவாக இருக்கிறார் முதல்வர். கொடுக்கின்ற வாக்குகளை நிறைவேற்றக்கூடிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என கேள்வி கேட்க யாரும் இல்லை. இந்தியா கூட்டணி ஜெயித்தால் அது நிறைவேறும் ஆனால் இந்தியா கூட்டணி என்பது 26 கட்சிகளின் கூட்டமைப்பு. அந்த 26 கட்சிகளின் கருத்துக்களை கேட்டு தான் நீங்கள் இந்த வாக்குறுதியை கொடுத்தீர்களா.? பாரதிய ஜனதாவோ பாமகவோ கொடுத்த தேர்தல் அறிக்கைகள் நாங்கள் என்ன செய்ய முடியும் என கொடுக்கிறோம். ஆனால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என்று நீங்கள் எப்படி கூற முடியும்? இதுகுறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். நடப்பதை பேசுங்கள்.

நான் ஆருடம் கூற தயாராக இல்லை. களத்தைப் பார்ப்போம். வேலை பார்ப்போம். கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்போடு நாங்கள் இந்த களத்தில் வெற்றி காண்போம் என பாமக வேட்பாளர் திலகபாமா கூறினார்

Views: - 105

0

0