பாத்ரூமில் குளிக்கும் போது படமெடுத்த பாம்பு : பதறியடித்து ஓடிய இளைஞர்… அண்ணாமலை பட பாணியில் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 2:20 pm
Snake - Updatenews360
Quick Share

இளைஞர் குளிக்கும்போது படமெடுத்துபடி கம்பனி கொடுத்த நாகப்பாம்பை பார்த்து பதறியடித்து ஓடிய இளைஞர்.

திருப்பூர் மாவட்டம் காமநாய்க்கன் பாளையம் காவல் நிலையம் எதிரே உள்ள பால் சொசைட்டி வீதி பகுதியில் குடியிருந்து கொண்டு தனியார் நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் பணி முடிந்து வீடு திரும்பிய அவர் குளிப்பதற்காக குளியலறை சென்று குளித்து கொண்டிருந்துள்ளார்‌. அப்போது திடீரென அவரது முதுகில் ஏதோ உரசுவது போலவும், சத்தமும் கேட்டுள்ளது.

அது என்னவென கவனிக்க அவர் திரும்பி பார்த்த போது,தண்ணீர் சுட வைக்கும் அண்டா உள்ள திட்டு பகுதியில் படமெடுத்த நிலையில் விசமுடைய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் பதறி அடித்து பாப்பா என தன்னிலை மறந்து கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் என்னவென விசாரித்த போது பாம்பு இருப்பது குறித்த அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளியல் அறையில் பாம்பை தேடினர்.


அப்போது பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் சுட வைக்கும் அடுப்பில் பாம்பு பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.அந்த அடுப்பு பயன்பாட்டில் இல்லாததால் அதன் வழியாக நுழைந்த நாகப்பாம்பு குளியல் அறையில் உள்ள ஓட்டை வழியாக வெளியில் வந்து இளைஞரை ஓட விட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து சென்றனர்.
திரைப்படத்தில் வருவது போல் ,குளித்து கொண்டிருந்த இளைஞரை நாகப்பாம்பு பாதி குளியலோடு ஓட விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 773

1

0