தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி…

5 August 2020, 8:09 pm
Quick Share

மதுரை: மதுரையில் கொரைனா தொற்று குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை என மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கான முன்னெற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “மதுரையில் மார்ச் 23 ஆம் தேதி முதன் முறையாக கொரைனா தொற்று ஏற்பட்டது, மதுரையில் ஜீன் மாதத்தில் கொரோனா அதிகரித்தது,

மதுரையில் 1 1/2 மாதத்தில் உச்சத்தில் இருந்து கொரைனா படிபடியாக குறைந்துள்ளது, மதுரையில் கொரோனா தொற்று குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை, முதல்வர் நாளை திண்டுக்கலிலும், மாலை மதுரையிலும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு, முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் விவசாயிகள், தொழில்த்துறையினர் பங்கேற்பு” என கூறினார். பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “முதல்வர் வருகையையோட்டி மதுரையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது, முதல்வர்கலுக்கெல்லாம் முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார்.

21.56 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். 326.10 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் அடிக்கல் நாட்டி வைக்கிறார். 1254 கோடி மதிப்பில் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் தொடக்கம், புதிய குடிநீர் திட்டத்தால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை வராது, மதுரை மக்களுக்கு முதல்வர் தலைமையிலான ஆட்சி ஒரு வரப்பிரசாதம்” என கூறினார்.

பின்னர் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் “தமிழகத்தில் நீரால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் கட்டுக்குள் உள்ளது, கொரோனாவை குறைக்க தமிழக மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்” என கூறினார்.

Views: - 9

0

0