கோழியை பிடிக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த மாணவி.. காப்பாற்ற சென்ற தாத்தாவும் தத்தளிப்பு : தீயணைப்புத்துறை எடுத்த ரிஸ்க்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 2:35 pm
Student Fall in Well - Updatenews360
Quick Share

திருப்பூர் : கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவியை தீயணைப்பு துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராயம்பாளையம் கிராமத்தில் புலிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். சொந்தமாக வேன் ஓட்டிவரும் இவரது மூத்தமகள் பவதாரிணி (வயது 16) என்பவர் அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை தங்களது வீட்டின் அருகே இருந்த விவசாய கிணறு ஓரமாக கோழி பிடிக்கச் சென்ற போது கிணற்றை சுற்றி படர்ந்திருத்த கொடியில் கால் சிக்கி தடுமாறி தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.

இதைக் கண்ட சிறுமியின் தாத்தா மாரய்யன் மற்றும் அருகில் கட்டிட வேலைக்கு வந்திருந்த மேஸ்திரி சிவக்குமார் ஆகிய இருவரும் உடனடியாக கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்ற கிணற்றுக்குள் இருக்கும் படிக்கல்லில் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழு சுமார் அரை மணி நேரம் போராடி மூவரையும் பத்திரமாக மீட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 946

0

0