அமைச்சர் மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் ஆட்சியர் காலில் விழுந்த பெண்

2 July 2021, 6:54 pm
Quick Share

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் ஆட்சியர் காலில் விழுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ், வட்டாட்சியர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு வெளி மாவட்டங்களிலிருந்து ஆற்றங் கரையோரம் வசிக்கும் பட்டியல் இன பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மனு அளித்து இருந்த நிலையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுடன் வெளியே வந்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வசம் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியரிடம் கும்மிடிப்பூண்டி சாமி ரெட்டி கண்டிகை சேர்ந்த தனது மகனை பணம் கேட்டு மிரட்டி தராததால் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்ததாகவும், நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருமணம் ஆக உள்ள தனது மகன் சிவ பாரத்தை ஜாமீனில் விட உதவி செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Views: - 62

0

0