பாத்ரூமில் கல்லூரி மாணவி உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்பு : கொலையா..? தற்கொலையா..? என விசாரணை

Author: Babu Lakshmanan
6 August 2021, 1:58 pm
thiruparankundram death - updatenews360
Quick Share

மதுரை : திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழிவறையில் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகள் கார்த்திகா (20). இவர் பி.காம். படித்துள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் கார்த்திகா தனது வீட்டின் குளியலறையில் தீயில் கருகிய நிலையில், உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் துறையினரை வரவழைத்து, சடலம் கிடந்த இடத்தில் திருமங்கலம் நகர் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். சாவில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், கார்த்திகாவின் தாயார் மற்றும் தந்தை கண்ணனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் மாணவி ஒருவர் வீட்டில் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 374

0

0