ஆண்டு ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் விலையில்லா மின் கட்டணம் வழங்கி வரும் அரசு : முதலமைச்சர் பழனிசாமி..

By: Udayachandran
7 February 2021, 6:50 pm
CM Speech- Updatenews360
Quick Share

திருவள்ளூர் : மின்வெட்டே இல்லாமல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டு ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் ரமணா தலைமையில் நெசவாளர்கள் விவசாயிகள் சந்திப்பு தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் அதுதான் அரசின் எண்ணம் என்று கூறினார்.

கால்நடை செல்வங்கள் சிறப்பாக வளர்க்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விலையில்லா கறவைப் பசு ஆடுகள் வழங்கி வருவதாகவும் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தந்து வருவதாகவும் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் உறுதியளித்தார்.

விலை இல்லா மின்சாரம் கைத்தறி விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் விலையில்லாமல் வழங்கி வருவதாக கூறினார்.

விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு உதவி செய்து வருவதாகவும் நீராபானம் தயாரிக்க அனுமதி அளித்துள்ளதாகவும்
கொரானா வைரஸ் தொற்று காலத்திலும் வேளாண் பெருமக்கள் பாதிக்கப்படாமல் அரசு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் நெசவாளர்களையும் உரிய முறையில் பார்த்து கொண்டதாகவும் அனைத்து மக்களும் எல்லா வசதிகளையும் பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் கடந்த ஆண்டு நீட் தேர்வால் 6 பேர் மட்டுமே மருத்துவ கல்லூரிக்கு சென்றதாகவும் அந்த நிலையை மாற்றி தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 41 சதவீதம் உள்ளதால் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து 400க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ்தான் அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் நீட் அறிவிப்பு வந்தது என்றும் விவசாயிகளின் ஆட்சி, நெசவாளர்கள் ஆட்சி மீண்டும் தொடர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் வெள்ளி ஏர்கலப்பையை பரிசளித்தனர்.

Views: - 45

0

0