கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு…? ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை..!!

Author: Babu Lakshmanan
27 July 2023, 1:42 pm
Quick Share

திருவாரூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வகுப்பறை பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். திருவாரூரில் அமைந்துள்ள இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி.

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது, இந்த பள்ளியில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தப் பள்ளியில் உள்ள ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகுப்பறை முகப்புகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் அந்தந்த வகுப்பு பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட்டு அடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபொழுது, வகுப்பறை மாற்றம் காரணமாக வகுப்பறை பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. விரைவாக தமிழ் மொழியிலும் வகுப்பறை பெயர்கள் எழுதப்படும், என தெரிவித்தார். தமிழ் மொழியை நாங்கள் புறக்கணிக்கவில்லை என தெரிவித்தார்.

Views: - 200

0

0