CM ஸ்டாலினுக்கு இது முதல் டெஸ்ட் : திமுக அமைச்சர்களுக்கு ஆர்வக்கோளாறு… கொளுத்தி போட்ட காங்.,எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 7:28 pm
Cong Mp Karthik Chidambaram - Updatenews360
Quick Share

இவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்ய மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு வாய்ப்பளித்தது நச்சு சக்தி வந்துவிட கூடாது என்பதற்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

இப்போது தான் வேட்பாளர்கள் பட்டியல் உறுதியாகியுள்ளது இனிமேல் தான் பிரச்சாரம் சூடுபிடிக்கும். எனது தந்தை ப சிதம்பரம் 18,19 தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

காங்கிரஸ் கட்சியைவிட முழுமையாக பலம் வாய்ந்த கட்சி திமுக என்பதை நாம் ஏற்று கொள்கிறேன். வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வருவார்கள் காங்கிரஸ் கட்சி தனது பங்களிப்பை முழுமையாக செய்யும்.

இவிகேஎஸ் இளங்கோவனுக்கு தொகுதியில் நன்கு அறிமுகம் உள்ளது
தற்போதைய அதிமுக செயற்கையாக உருவாக்கப்பட்ட கட்சியாக தான் பார்க்கிறேன்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த அதிமுக தற்போது இல்லை. மத்தியில் ஆளும் பாஜகவின் செயற்கையாக தான் அதிமுக செயல்பட்டு கொண்டுள்ளது. இதனால் அதிமுக வைக்கும் விமர்சனங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற இன்னும் மூன்று ஆண்டுகள் இருப்பதால் விரைவில் நிறைவேற்றுவார்கள் என்றார்.

திமுக காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்க தான் செய்யும் ஆனால் பெரும்பாலாக மதசார்பற்ற கொள்கையில் ஒன்றாக தான் உள்ளோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக வழங்கி இருக்கலாம் ஆனால் விடுதலை செய்துள்ளார்கள். அதனை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.

இந்தியாவில் 75 சதவீதம் சிறையில் இருப்பவர்கள் விசாரணை கைதியாக தான் உள்ளார்கள். இதனை மத்திய அரசு சட்ட திருத்தம் மூலம் மாற்ற வேண்டும் விசாரணை கைதிகள் குற்றவாளி உறுதியான பிறகு தான் தண்டிக்கப்பட வேண்டும்.

இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முன்பு சிறையில் அலாகத் முறையில் விசாரணை நடத்தி தீர்வு கிடைக்க வேண்டும். எனது தந்தை சிதம்பரத்திற்கும் எனக்கு மாற்று கருத்து இருக்க கூடாத தனிமனித வருமானவரி குறைத்து இருப்பதற்கு மட்டுமே வரவேற்பு தெரிவித்துள்ளேன்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் கட்டவில்லை ஆனால் ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி சான்றிதழில் எய்ம்ஸ் மருத்துவமனை சான்றிதழ் என உள்ளது

பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது 27ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கி கொடுத்துள்ளது எந்த ஆவணத்தை அடிப்படையில் கடன் வழங்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் செபி, ஆர்டிபிஐ ஆகிய மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிக்க தவறிவிட்டது. அமெரிக்க நிறுவன அறிக்கை பொய் என்று வைத்து கொண்டால் கூட அதை நிரூப்பிக்க வேண்டும் என்ற பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

கூட்டு பாரளுமன்ற குழு விசாரணைக்கு அதானி குழுமத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அமைச்சர்கள் ஆர்வம் மிகுதி காரணமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரிலேயா இடையே நடக்கும் டெஸ் தொடரை நினைவில் வைத்துக் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருப்பார் என்று கூறிய அவர் நாக்பூருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் சொல்லுகிறேன்

Views: - 241

0

0