பாரில் பணம் கேட்டு மிரட்டல்? : பா.ம.க. இளைஞரணி துணை செயலாளர் மீது குற்றச்சாட்டு..!

24 August 2020, 12:03 pm
PMK Issue - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக பா.ம.க மாநில இளைஞரணி துணை செயலாளர் அஷோக் ஸ்ரீநிதி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பார் ஊழியர்களிடம் அவர் மல்லுக்கட்டும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே நொய்யலில் மணல் கொள்ளை, தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் பல முறை மனு அளித்துள்ளார்.

இந்த சூழலில், கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் பணம் கேட்டு ரகளை செய்ததாக அசோக் ஸ்ரீநிதி மீது புகார் எழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளையும் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள சூழலில், நேற்று அங்கு சென்றுள்ளார் அசோக் ஸ்ரீநிதி.

மேலும், அங்கு சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பார் ஊழியர் ஒருவரிடம் இது குறித்து பேரம் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது .

பார் உரிமையாளர்கள் பணம் கொடுக்க முடியது என்று திட்டவட்டமாக தெரிவித்ததால் அசோக் ஸ்ரீநிதி போலீசாரிடம் புகார் அளித்து, சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கூறியதாகவும் தெரிகிறது.

இந்த சூழலில், போலீசார் அந்த பாருக்கு சென்ற போது அசோக் ஸ்ரீநிதியும் அங்கு சென்றுள்ளார். ஆத்திரமடைந்த பார் ஊழியர்கள் அசோக் ஸ்ரீநிதியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். மேலும், அசோக் ஸ்ரீ நிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டாஸ்மாக் பாரில் பணம் கேட்டு அடி வாங்கியதால் கட்சியில் தனக்கிருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார் என்று பா.ம.க வட்டாரத்தில் கூறப்பட்டாலும், வெளியான ஆடியோ போலியானது என்றும், போலீஸ் வருவதற்காக காத்திருந்ததை திரித்து கூறுவதாகவும் அசோக் ஸ்ரீநீதி மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0