தூங்கி கொண்டிருந்த மாணவியை மிதித்துக் கொன்ற யானை : சோகத்தில் மூழ்கிய கிராமம்!

24 September 2020, 1:11 pm
elephant Attack dead - updatenews360
Quick Share

திருப்பத்தூர் : தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் யானை மிதித்து 12 ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லையதன பருத்திகொள்ளி பகுதியில் முருகன் என்ற விவசாயி வேர்க்கடலை விவசாயம் செய்தி வருகிறார். இந்த நிலையில் வேர்கடலை செடிகளை காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் சேதம் செய்வதில் இருந்து தடுப்பதற்காக மனைவி, மகளுடன் தன்னுடைய நிலத்தில் தூங்கினர்.

நள்ளிரவு 12 மணி அளவில் அங்கு வந்த ஒற்றை யானை ஒன்று பயிர்களை சேதம் செய்தது. சத்தம் கேட்டு முருகனுடைய மனைவி அதனை கூச்சல் போட்டு விரட்ட முயன்றார். முருகன் மனைவியை தூக்கி வீசிய ஒற்றையானை, அவர்களுடைய மகள் ஆன 12 வது படிக்கும் சோனியா தூங்கி கொண்டிருந்த நிலையில் மிதித்து கொன்று அங்கிருந்து சென்று விட்டது.

முருகன் அளித்த தகவலின் பேரில், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்துகின்றனர். உயிரிழந்த சோனியா உடலை மீட்டு ஆந்திர வனத்துறையினர் குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். உயிரிழந்த 12ஆம் வகுப்பு மாணவியின் உடலை பார்த்த கிராம மக்கள் கதறி அழுத காட்சி காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கியது.

Views: - 9

0

0