ஒருநாள் மழைக்கே தாங்காத சாலைகள்… 300 அடி தூரத்திற்கு டேமேஜ்… 2 அடியில் பொத்தல் ; பொதுமக்கள் அதிருப்தி…!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 8:00 pm
Quick Share

ஒரு நாள் மழையால் 2 அடி பள்ளமான போக்குவரத்து நிறைந்த சாலையில் உள்ள குழியால் விபத்துக்கள் நிகழ்வதால் தரமான சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட 31 வார்டு ஒம் சக்தி கோயில் வீதியில் கடந்த சில மாதங்கள் முன்பு புதிய தார் சாலை அமைத்தனர். தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டில் இருந்த சாலை கடந்த இரண்டு நாட்கள் முன்பு திருப்பூர் மாவட்டத்தில் 17 செ.மீ மழை பெய்தது. அதுவும் தமிழகத்தில் அன்று திருப்பூரில் தான் அதிக மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மழையில் கொங்கு மெயின் ரோடு, எஸ்.வி.காலனி, எம்.எஸ் நகர், திருநீலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொழிந்த மழை நீர் அனைத்தும் இந்த சாலை வழியாக சென்று யூனியன் மில் சாலை அருகில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. அதிக நீர் வந்ததால் சில மாதங்கள் முன்பு போடப்பட்ட தார் சாலை சுமார் 300 அடி தூரம் பெயர்ந்துள்ளது. சில இடங்களில் சுமார் 2 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்படுவதாகவும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சாலையை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும், சாலையை உடனடியாக தரமாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 163

0

0