பளபளனு இருந்த 500 ரூபாய் நோட்டு! ரூ.28 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்!!

22 August 2020, 11:36 am
Tirupur Fake Note- Updatenews360
Quick Share

திருப்பூர் : 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து ரூ.28 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் பகுதியை சேர்ந்தவர் செல்வி என்பவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடைக்கு நேற்று மாலை வந்த இரு வாலிபர்கள், 50 ரூபாய்க்கு சிகரெட் உட்பட பொருள் வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டு கொடுத்தனர்.மீதி பணத்தை செல்வி கொடுத்ததும், இருவரும் பைக்கில் சென்று விட்டனர்.

ரூ.500 பணம் குறித்து சந்தேகப்பட்ட அவர்,இது குறித்து குன்னத்துார் போலீசில் புகார் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து,போலீசார் கோபி செல்லும் சாலையில் வாகனச்சோதனை நடத்திய போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள், மதுரை புதுமேட்டு தெருவை சேர்ந்த சதீஷ், அலங்காநல்லுாரை சேர்ந்த புகழ் என்பதும், மொத்தம், 28 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார்,அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.