மலைவாழ் பெண் சுட்டுக்கொலை : நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது!!

23 August 2020, 6:35 pm
Udumalai Shot Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலை அருகே மறையூரில் மலைவாழ் பெண் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் உறவினர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரளா இடுக்கி மாவட்டம் மறையூர் ஆதிவாசி குடியிருப்பை சேர்ந்த மாரிக்கண்ணன் மகள் சந்திரிகா (வயது 34). இவருடைய உறவினர் பாலப்படியை சார்ந்த காளியப்பன் சந்தன மரங்களை கடத்தி வந்துள்ளார்.

இதனை வனக்காவலர்களான பொன்னுச்சாமி, பழனிச்சாமி மலைவாழ் மக்கள் ஆகியோருடன் இணைந்து சந்தன மரங்களை வெடி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது குறித்து புகார் அளித்துள்ளனர். புகார் அளித்ததை தொடர்ந்து வனத்துறையினர் காளியப்பனை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துளளார். 

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக வனக் காவலர்களை சுட்டுக் கொல்ல காளியப்பன் நாட்டுத் துப்பாக்கி வாங்கி அவர்களை தேடி வந்துள்ளார். அவருடன் அவரது நண்பன் மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவனை அழைத்துக் கொண்டு மலைவாழ் மக்களை தங்கியிருக்கும் பகுதிகளில் வணக்கவளர் களை தேடி வந்துள்ளார்.

சந்திரிகாவின் தோட்டத்தில் வனக்காவலர்கள் பொன்னுச்சாமி, பழனிச்சாமி, அசோகன் ஆகிய மூவரும் பதுங்கியிருப்பதாக தகவல் கேட்டு அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த காளியப்பன் சந்திரிக்காவின் கழுத்தில் சுட்டுக் கொலை செய்துள்ளார். 

அதன்பின் தப்பி ஓட முயன்ற காளியப்பன் மற்றும் உடனிருந்த இருவரையும்  சந்திரிகாவின் உறவினர்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். இதையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் காளியப்பன் கைது செய்து அவருடன் வந்த பள்ளி மாணவன் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Views: - 48

0

0