திருவள்ளூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ; வடமாநில கும்பலா..? போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 9:46 am
Quick Share

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் எஸ்பிஐ தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் வங்கியின் இயந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்து பல லட்சம் ரூபாய் பணம் அதிஷ்டவசமாக தப்பியது.

கொள்ளை முயற்சி குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் காவல் துறையினர், ஏடிஎம்மில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடவியல் பரிசோதனை மேற்கொண்டு, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கைரேகை பதிவுகளைக் கொண்டும், கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் விவரம் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் பூண்டி அருகே இந்தியா 1 ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயற்சி நடந்த நிலையில், தற்போது கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியிலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 280

0

0