தமிகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!!

14 September 2020, 7:53 pm
MLA Corona- updatenews360
Quick Share

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருவது அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருகிறது.

இந்தநிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக தொகுதி எம்எல்ஏ கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரது உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் இன்று பரிசோதனை செய்ததில் எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் உட்பட முன்னாள் எம்எல்ஏக்கள் பலியானது குறிப்பிடதக்கது.