அன்பும் அமைதியும் நிலவட்டும் : மலையாள மக்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஓணம் வாழ்த்து!!

30 August 2020, 11:28 am
Onam Wishes - Updatenews360
Quick Share

கேரள மக்களால் வெகு விமர்சையாக கொணடாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மலையாள மொழி பேசும் கேரள மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை திருவோணத் திருவிழாவாகும். நாளை விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித் திருவோண்த்தன்று ஓணத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இல்லம் தோறும், அன்பும், அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என்று மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது : சமத்துவம் மற்றும் சகோதரத்துவதத்தை வலியுறுத்தும் வகையில் சாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும என்று வாழ்த்தி மீண்டும் ஒருமுறை உளமார்ந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Views: - 24

0

0