இன்று கொரோனா பலி எண்ணிக்கையில் சென்னைக்கு அடுத்து கோவை.! இன்றைய மாவட்ட நிலவரம்.!!

16 August 2020, 6:31 pm
corona Cbe -Updatnews360
Quick Share

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 5950 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5950 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 650 ஆக உள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மவாட்டங்களில் இன்று பாதிப்பு அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 125 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 6 ஆயிரத்து 19 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

திருவள்ளூரில் இன்று 488 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 436 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 307 பேருக்கும் , மதுரையில் 121 பேருக்கும் , கோவையில் 395 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தேனியில் 205, திருவண்ணாமலையில் 98, தஞ்சையில் 124 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று இரண்டாவது முறையாக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 7 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 பேரும் பலியாகியுள்ளனர். இன்று கோவையில் ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 1

0

0