நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பா? இல்லையா? தமிழக அரசு விளக்கம்

6 August 2020, 6:55 pm
School -updatenews360
Quick Share

சென்னை: நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்ற தகவல்களில் உண்மையில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் இன்னமும் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. தேசிய அளவில் அதிக பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்திலும் உச்சக்கட்ட பாதிப்பு உள்ளது.

அதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆன்லைன் வழியே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. பள்ளிகள் திறப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டன. ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

 இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மேலும் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை, சூழ்நிலையை பொறுத்து தான் முடிவு செய்யப்படும். அது குறித்து முதலமைச்சர் உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

ஆகையால் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று உலா வரும் செய்திகளில் உண்மையில்லை என்பது இதன்மூலம் புலனாகிறது.

Views: - 32

0

0