ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்ற சபாநாயகர் அப்பாவு : மனைவியின் மறைவுக்கு நேரில் ஆறுதல்!!

By: Udayachandran
15 September 2021, 4:41 pm
Appavu Meet OPS - Updatenews360
Quick Share

தேனி : ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்ற தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவரது மனைவியின் மறைவு குறித்து நேரில் கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் பெரியகுளத்தில் உள்ள பொது மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், மகாராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் அனைவரும் வந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.

Views: - 122

0

0