நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவியுடன் சிகிச்சை : உடல்நிலையில் பின்னடைவா?

16 April 2021, 2:09 pm
Vivek Hospitalized -Updatenews360
Quick Share

மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டள்ள நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விவேக் இன்று காலை சினிமா படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திய நடிகர் விவேக்கிற்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட் வருகிறது.

இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நடிகர் விவேக்கை கண்காணித்து வரும் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எக்மோ சிகிச்சையில் உள்ள அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நடிகர் விவேக் தற்போது சுயநினைவுடன் உள்ளதாகவும், அதே சமயம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 39

0

0