தேர்தல் பிரச்சாரப் பணியில் டிராபிக் ராமசாமி : விழிப்புணர்வு துண்டு சீட்டுகள் விநியோகம்!!

Author: Udayachandran
10 October 2020, 12:11 pm
Taffic Ramasamy - Updatenews360
Quick Share

கோவை : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வரும் தேர்தலில் நல்லோர்க்கு வாக்களியுங்கள் என்று கூறி கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டு சீட்டுகளை வழங்கி வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், மக்கள் பணி செய்யும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த துண்டுச்சீட்டுகளை வழங்கி வருவதாகவும், ஒருகோடி மக்களுக்கு இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பதாகவும் தெரிவிக்கிறார்.

Views: - 39

0

0