பள்ளியை சோலைவனமாக மாற்றிய மாணவர்கள்!!

21 August 2020, 11:24 am
School - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள பூதலப்புரம் கிராமத்தில் சீமைகருவேல மரங்களால் சூழ்ந்த காணப்பட்ட பள்ளியை மரங்கள் சூழ்ந்த சோலைவனமாக மாற்றி காட்டி அசத்தியுள்ள அப்பள்ளி மாணவர்களின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பூதலப்புரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இப்பள்ளி கிராமத்தின் உள்ளே செயல்பட்டு வந்த நிலையில் ஊருக்கு அருகே விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

ஊருக்கு வெளியே என்பதால் பள்ளியை சுற்றி அதிகளவில் சீமைகருவேல மரங்கள் சுற்றி காட்சியளித்து வந்தது. மேலும் அதிகளவில் புதர் மண்டி கிடந்ததால் விஷ பூச்சிகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்து வந்தனர். இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் சீமைகருவேல மரங்களை அகற்றி மரங்களை வளர்க்க முடிவு செய்து, ஆசிரியர்களிடம் கேட்க, அதற்கு பச்சைக்கொடி கட்டியது மட்டுமின்றி, மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தொடங்கினர்.

அதன் பயனாக பள்ளிவளாகம் மற்றும் சுற்றி இருந்த சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றி வேம்பு,புங்கை, அரசமரம், அலங்கார வாகை வாதமரம், மலை வேம்பு உள்ளிட்ட 6 மரங்களை மாணவர்கள் நட்டு பராமரிப்பு வருகின்றனர்.

மாணவர்களின் முயற்சியினால் சீமை கருவே மரங்களாக காட்சியளித்த பள்ளி வாளகம் தற்பொழுது சோலை வனம் போன்று மரங்களாக காட்சியளித்து வருகிறது. இதற்கிடையில் சோலை வனமாக இருக்கும் மரங்கள் கொரோனா காலத்தில் தண்ணீர் மற்றும் பராமரிப்பு இல்லமால் மரங்கள் வாடிவிடக்கூடாது, பசுமை போய் விடக்கூடாது என்று யோசித்த மாணவர்கள், தினமும் பள்ளிக்கு வந்து தண்ணீர் பராமரிப்பு செய்ய முடிவு எடுத்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.

ஆசிரியர்களும் சம்மதம் தெரிவிக்க பள்ளி அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சுழற்சி முறையில் கடந்த 4 மாதங்களாக பள்ளிக்கு வந்து மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வந்ததால் மரங்கள் வாடி போகமால் தொடர்ந்து சோலைவனமாக காட்சியளித்து வருவது மட்டுமின்றி, மாணவர்களுக்கு மனமகிழ்ச்சிiயும், ஆசிரியர்களுக்கு தங்கள் மாணவர்களை கண்டும் பெருமிதமும் அடைந்துள்ளனர்.

Views: - 42

0

0