வேகத்தடையால் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் : அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!

Author: Udayachandran
31 July 2021, 4:15 pm
Dgl Accident - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : சித்தையன்கோட்டை கடைவீதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் நிலைதடுமாறி அரசு பேருந்து மீது மோதியதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் போட்டை அருகே ஆத்தூர் ஒன்றியம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 45). இவர் சேடப்பட்டியில் தங்கி காண்ட்ராக்ட் பணியில் ஈடுபட்டு வரும் போடி கமன்வடி சேர்ந்த முருகன் என்பவரின் பணியாளராக சித்தாள் வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு முருகனுடைய டிவிஎஸ் 50 வாகனத்தில் 3 பேர் பயணித்து வந்தனர். சொக்கலிங்கபுரம் வழியாக சித்தையன்கோட்டை கடைவீதி அருகே வந்துகொண்டிருந்தபோது அந்த இடத்தில் இருந்த வேகத்தடையில் டிவிஎஸ் ஃபிப்டி வாகனம் ஏறி இறங்கும் பொழுது தடுமாறி ஒருபக்கம் வாகனம் சாய்ந்தது.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து போடி காமன்வாடி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் அருகே இருசக்கர வாகனம் சாய்ந்ததில் மூன்று பேரில் 2 பெண்கள் தடுமாறி விழுந்தனர்.

இதில் பழனியாம்மாள் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாராயணன் தலைமையிலான காவலர்கள் இறந்த பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 246

0

0