காலியானது திருக்கோவிலூர் தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த முடிவு? தேர்தல் ஆணையம் திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2024, 7:30 pm
Thirukovi
Quick Share

காலியானது திருக்கோவிலூர் தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த முடிவு? தேர்தல் ஆணையம் திட்டம்!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். மேலும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.

இத்தகைய சூலில் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது எம்எல்ஏ பதவி தானாக காலியாகி விட்டது. ஆனால் அவரது தொகுதி மட்டும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை.

தொகுதி காலியானதாக அறிவித்தால் மட்டுமே அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதுதொடர்பாக சட்டசபை சபாநாயகர் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க அவர்கள் மனு அளித்தனர். இந்நிலையில் தான் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இததொடர்பாக தமிழக சட்டசபை செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் விரைவில் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

அதாவது வரும் 15ம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Views: - 80

0

0