கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம் : 500 பேருக்கு செலுத்தப்பட்டது!!

18 July 2021, 2:58 pm
Cbe Vaccine Camp - Updatenews360
Quick Share

கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி போதிய இருப்பு இல்லாததால் மக்கள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களின் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த தடுப்பூசி முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் ஒப்பந்ததாரர்கள், தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர், துணை செயலாளர் மைக்கேல், பொருளாளர் அம்மாசியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் ஒப்பந்ததரார்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக 500 பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும்
2000 பேருக்கு தடுப்பூசி வழங்க உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தததற்காக கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும நகர் நல ஆணையருக்கு நன்றியை தெரிவித்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Views: - 196

0

0